பிகில் திரைப்படத்தின் கதை என்னுடையது உரிமை கொண்டாடும் மற்றொரு இயக்குனர்.! வெடித்தது பிரச்சனை

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது, இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிகில் திரைப்படத்திற்கு மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது, பிகில் திரைப்படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த வழக்கின் தீர்ப்பு வருகிற திங்கள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கு பட இயக்குனர் சீனு குமார் என்பவர் பிகில் இயக்குனர் அட்லி மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார், அந்த புகாரில்

கால்பந்து வீரர் அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை ’ஸ்லம் சாக்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானா சினிமா கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், இந்த படத்தை உருவாக்கும் பணியில் தான் இருந்தபோது, இந்த படத்தின் கதையும் ‘விசில்’ கதையும் ஒன்று என தனக்கு தெரிய வந்ததாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.