பிகில் படத்தின் மாஸ் அப்டேட் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாடவைத்த தயாரிப்பாளர்.!

0
bigil-movie-father-name
bigil-movie-father-name

Bigil update : விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார், இதற்குமுன் அட்லி இயக்கத்தில் விஜய் தெறி மற்றும் மெர்சல் திரைப்படம் நடித்துள்ளார், இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் கல்லா கட்டியது. மேலும் பிகில்  திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, கதிர், ஜாக்கிஷராப், விவேக்,டேனியல் பாலாஜி என பலர் நடித்துள்ளார்கள்.

விஜய் பிறந்த நாளன்று இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள், இது ரசிகர்களிடம் வைரல் ஆனது, இந்த நிலையில் படத்திலிருந்து ஏதாவது update வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பத்தி  நேற்று  மாலை 6 மணிக்கு படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதில் சிங்கிள் கிடையாது, டீஸர், ட்ரெய்லர், ஆடியோ லான்ச் படத்தின் ரிலீஸ் டேட் என எதுவும் கிடையாது, ஆனால் தரமான அப்டேட் இருக்கிறது என டுவிட் செய்தார், அதேபோல் ஆறு மணிக்கு அப்டேட் வெளியிட்டார்கள் அதாவது விஜய் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை பாட இருக்கிறாராம், இதுதான் அந்த அப்டேட் என கூறியுள்ளார்கள் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருந்தாலும் வழக்கம்போல் ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.