ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிகில் படத்தில் இருந்து சிங்க பெண்ணே பாடல் இதோ.!

0

விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில்  பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் டிராக் 23 ஆம் தேதி  வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது சோனி நிறுவனம்.

ஆனால் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மாலை வரை பாடல் எதுவும் வெளியாகவில்லை, அதனால் ரசிகர்கள் அனைவரும் தயாரிப்பாளரை நச்சரித்து வந்தார்கள், ரிலீஸ் டைம் சொல்லுங்க எனவும் டைம் சொல்லுங்க எனவும் கேட்டுள்ளார்கள் இதில் #டைம்சொல்லுங்கஆர்சு என்ற டேக் ட்ரெண்ட் ஆனது.

இந்த நிலையில் பாடல் கண்டிப்பாக வெளியாகும் என  பாடல் ஆசிரியர் விவேக் கூறினார் அதே போல் இரவு பாடலை வெளியிட்டார்கள் தற்பொழுது ரசிகரக்ளிடம் வைரளாகி வருகிறது.