பிகில் படத்தில் இருந்து லீக்கான சிங்கப் பெண்ணே பாடல்.! சமூக வலைதளத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.!

0
264

bigil song leaked : தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் யோகிபாபு, விவேக், ஜாக்கிஷராப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள்.

பிகில் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது, மேலும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் பிசியோதெரபி மாணவியாக நடிக்கிறார், அதற்காக சென்னையில் பிரபல கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பிகில் திரைப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே ‘ என்ற பாடல் இணையதளத்தில் லீக் ஆகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி வருகிறது. பிகில் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.