பிகில் திரைவிமர்சனம்.!

0

தளபதி விஜய் படம் என்றாலே உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அந்தவகையில் தெறி, மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில், இவர்கள் இணைந்த மூன்றாவது திரைப்படம் ஆகும். பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குக்கு மேல் ரிலீஸாகியுள்ளது இன்று எங்கு திரும்பினாலும் பிகில் தான். அந்தவகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பிகில் திரைப்படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.

படத்தின் கதை.

படத்தில் மைக்கேல் விஜய் தனது ஏறிய பசங்களுக்காக எது வேணாலும் செய்யக்கூடியவர், ஏரியா பசங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் ஓடி வந்து உதவி செய்பவர், மேலும் தனது ஏரியா பசங்களை எப்படியாவது பெரிய ஆளாக்க வேண்டும் என்று தன்னால் முடிந்த உதவியை செய்து வருவார், ஏரியா பசங்க மீது காட்டும் அக்கறை, மற்றும் நல்ல எண்ணத்தில் இருக்கிறார்.

இப்படி நல்ல எண்ணத்தில் இருக்கும் விஜய்யை ஒரு கும்பல் எப்பொழுதும் கொலை செய்ய துரத்துகிறது, அப்பொழுது எதிர்பாராதவிதமாக பெண்கள் அணி கோச்சராக இருக்கும் விஜயின் நண்பர் பாதிக்கபடுகிறார் இங்குதான் வெடிக்கிறது பிரச்சனை, இவர் தாக்கப்பட்டதும் அந்தப் பெண்கள் அணிக்கு கோச் செய்ய முடியாமல் போகிறது, அதனால் அந்த இடத்திற்கு எந்த கோச் போடலாம் என யோசிக்க அந்த ஒரு இடத்திற்கு ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் கலக்கிய விஜய்யை கோச்சாக செல்கிறார்.

ஆனால் விஜய் கோச்சாக இருப்பதை அந்த பெண்  அணி வீராங்கனைகள் பலர் ஏற்க மறுக்கிறார்கள் அவர்கள் மனதில் எப்படி இடம் பிடிக்கிறார் விஜய் அந்த அணியை எப்படி வெல்ல வைக்கிறார் என்பதை படத்தின் மீதிக்கதை.

படம் முழுவதும் தனிமனிதனாக படத்தை தனது தோளில் சுமப்பவர் என்றால் அது விஜய் தான், விஜய் ஒருவரை நம்பி தான் படம், விஜய் இல்லை ன்றால் படம் அவ்வளவுதான் என்ற எண்ணம் அனைவரிடமும் எழுந்துவிடும், படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் விஜய் மட்டுமே முழு படத்தையும் தாங்கி செல்கிறார், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்திலும் சரி தனது ஏரியா பிள்ளைகள் முன்னேற வேண்டும் என்பதற்காக கத்தியை எடுத்த ராயப்பன் சரி தொட்டதெல்லாம் தூள் தான்.

படத்தில் விஜய்க்கு வயதான அப்பா கதாபாத்திரம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை, அப்பா கதாபாத்திரமாக இல்லாமல் அண்ணன் கதாபாத்திரத்தில் விஜய் காட்டியிருக்கலாம் இன்னும் தூளாக இருந்திருக்கும், அதிலும் நயன்தாரா அப்பா என்று கூப்பிடுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது, படத்தில் சிங்க பெண்ணே பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனாலும். படமாகப் பார்க்கும் பொழுது அங்கு இங்கும் எமோஷனல் ஒர்க் ஆகியுள்ளது தவிர படம் முழுவதும் ஒரு நிறைவு இல்லை.

அதேபோல் படத்தின் முதல் பாதி படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது, அதனால் படம் பார்ப்பவர் ஃபுட்பால் மேட்சுக்கு போங்கப்பா எனக் கூறுமளவிற்கு இருக்கிறது, அதேபோல் ஃபுட்பால் மேட்ச் பார்க்கும் பொழுது பயங்கர சுவாரசியம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மாறி மாறி கோல் போடுகிறார்களே தவிர நமக்கு ஒரு எந்த ஒரு ஆர்வம் தோன்றவில்லை,.

மேலும் விஜய்க்கு ஜோடியாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் போட்டியாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்க விஜய் போராடும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கவைக்கும், ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள் கிளைமாக்ஸில் அண்ணியை திட்டி வெறுப்பேற்றுவது, என இரண்டாம் பாதி முழுவதும் கைதட்டலுக்கு பஞ்சமே இல்லை, இதேபோல் முதல் பாதியிலும் சில காட்சிகள் வைத்திருக்கலாம். மேலும் விஜய் காமெடியாக பேசும்போது சென்னை ஸ்லாம் சீரியஸாக பேசும் பொழுது நல்ல தமிழிலும் பேசுகிறார், பிள்ளைகளை கௌரவ படுத்துவதாக எண்ணி தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வருகின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவு தான் விஷ்ணுவரதன் பின்னி பெடல் எடுத்து விட்டார் செம கலர்ஃபுல் காட்சிகள், மேலும் ரகுமானின் இசை மாஸ் காட்சிகளுக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் எமோஷன் காட்சிகளுக்கு அற்புதமாக இருந்தது, எடிட்டர் ரூபன் தேவையில்லாத காட்சிகள் படத்தில் இன்னும் கொஞ்சம் கட் செய்து இருக்கலாம்.

படத்தின் இரண்டாம் பாதி தான் ரசிகர்களுக்கான படம், படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள். டீசரில் மோசமாக சில காட்சி திரையில் நன்றாகவே உள்ளது. மேலும் படத்தின் முதல் பாதியில் ராயப்பன் கதாப்பாத்திரத்தை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம். கதிர், நயன்தாரா, ஆனந்த் ராஜ் என பல நட்சத்திரங்கள் எதற்கு என்றே தெரியவில்லை. போட்டிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் பிகில் : 3 / 5