ரவுடிகளுடன் விஜய்.! பிகில் புதிய போஸ்டருடன் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!

0

bigil : தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார் இதற்கு பிகில் என்ன பெயர் வைத்துள்ளார்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக் கொண்டே செல்கின்றன, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மேலும் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள கதையில் மிகப் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், சமீபத்தில் பிகில் படத்திலிருந்து சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகி யூட்யூபில் பிரமாண்ட சாதனை படைத்தது.

படத்தின் பூஜை தொடங்கியதிலிருந்தே படக்குழு பல சவால்களை சந்தித்து வந்தது, அதேபோல் ரசிகர்களும் அப்டேட் கேட்டு சமூகவலைதளத்தில் அதிகமாக பதிவிட்டு இருந்தார்கள், படத்தின் தயாரிப்பாளரிடம் பல சினிமா பிரபலங்களும் அப்டேட் கேட்டு நச்சரித்தார்கள் சமூகவலைதளத்தில் பல டாக்குகள் ட்ரெண்டிங்கில் வந்தது.

இந்தநிலையில் பிகில் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து பலருக்கும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அந்த அப்டேட்டில் பிகில் எங்கள் கனவு பிராஜெக்ட் எனவும் எத்தனை நாள் சூட்டிங் செய்தோம் எனவும் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஷூட்டிங் சமயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அட்லியின் கனவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறியிருக்கிறார். இந்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தீபாவளி தினத்தில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

bigil-deepavali-release
bigil-deepavali-release