சிங்கப் பெண்ணே பாடலைத் தொடர்ந்து பிகில் பட தயாரிப்பாளர் போட்ட ட்வீட்.! உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஜயுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, ஆனந்த்ராஜ் டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் பெண்களை கௌரவிக்கும் விதமாக சிங்க பெண்ணே என்ற பாடல் சமீபத்தில் வெளியானது, இந்த பாடல் அனைத்து ரசிகர்களிடமும் வைரலாகி பிரபலமானது அதேபோல் யூடியூபில் டிரெண்டிங்கில் வந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் இந்த பாடலை பாராட்டினார்கள்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கால் பதி ஒரு டுவிட் செய்துள்ளார் அதில் நாம் அனைவரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்து இருப்போம் அவர்களைப் பற்றி பதிவிடுங்கள் வீடியோ வருகிறது என டுவிட் செய்துள்ளார். அவர் சொன்னதும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் ஆவலுடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.