பிகில் படத்தின் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா இதோ ஆதாரம்.! ரசிகர்கள் அதிர்ச்சி

0

தளபதி விஜய் சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது மேலும் படத்தில் யோகி பாபு, ஜாக்கி ஷராஃப், இந்துஜா, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, நயன்தாரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 63 படமான பிகில் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்டார், இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி  படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, பிகில் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது, அதுமட்டுமில்லாமல் போஸ்டரில் இருந்து மகன் விஜய்யின் பெயர் மைக்கேல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்பா விஜய்யின் பெயர் ராயப்ப என கூறுகிறார்கள், ஒரு சிலர் பிகில்தான் அப்பா விஜய்யின் பெயர் எனக் கூறுகிறார்கள், இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து  கேள்விகளை படத்தின் தயாரிப்பாளர் ட்வீட் செய்து வருகிறார், அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் கொடுத்த போஸ் விஜய் நடித்த பழைய படத்தின் போஸ்டர் என அவரே கூறியுள்ளார் மேலும் அது எந்த திரைப்படம் எனவும் கேள்வி கேட்டிருந்தார் இந்த நிலையில் அதற்கான விடையை தற்போது வெளியிட்டுள்ளார்கள், விஜய் திருமலை திரைப்படத்தில் இதேபோல் போஸ் கொடுத்துள்ளார் இதை தான் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.