பிகில் படத்தின் ஒரு வரி கதை.! ஆன்லைன் டிக்கெட் புக் இணையதளம் வெளியிட்ட தகவல்

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் தந்தை-மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இன்று பிகில்  படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல சினிமா டிக்கெட் புக்கிங் இணையதளம் ஒன்று பிகில் படத்தின் ஒரு வரி கதையை கூறியுள்ளது, அதன்படி கால்பந்து பயிற்சியாளராக வருகிறார் கதாநாயகன், ஒரு கட்டத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பன் கொலை செய்யப்படுகிறார் இதனால் ஆத்திரமடையும் நாயகன் நண்பனின் கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்குவது மட்டும் அல்லாமல், அவரது வாழ்நாள் கால்பந்தாட்டம் சம்பந்தமான கனவை நிறைவேற்ற துடிக்கிறார்.

எப்படி தனது கனவை நிறைவேற்றிநார், எப்படி கொலை செய்தார், எப்படி பழி தீர்த்துக் கொள்கிறார் என்பதுதான் மீதிக்கதை இவ்வாறு அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.