பிகில் படம் திரையிட முடியாது.! சென்னை பிரபல திரையங்கம் அதிரடி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது, பெரும்பாலும் பிகில் திரைப்படத்தை தான் பல திரையரங்குகளில் திரையிட இருக்கிறார்கள், கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

பல திரையரங்கம் இந்த திரைப்படத்தை திரையிட்டாலும் சென்னையில் உள்ள முன்னணி தியேட்டரான போரூர் ஜிகே சினிமாஸ், பிகில் திரைப்படத்தை திரையிட போவதில்லை என அறிவித்துள்ளார்கள்.

இதற்கு காரணம் விநியோகஸ்தரிடம் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் தங்கள் கைது திரைப்படத்தை மட்டுமே திரையிட இருக்கிறோம் என ஜிகே சினிமாஸ் உரிமையாளர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார், இதனால் விஜய் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.