விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷராஃப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், கதிர், இந்துஜா, மோனிகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது, மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார், அட்லி இயக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21ம் தேதியும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான 22ஆம் தேதி இரவு 12 மணிக்கும் ரிலீஸ் செய்தார்கள். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டரை வைத்து பிகில் படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என உறுதி செய்யப்பட்டது ஏனென்றால் அந்த போஸ்டர் விஜய் அணிந்திருக்கும் ஜெயஸ்ரீயின் மூலம் இந்தப் பெயர்தான் என அனைவரும் தெரிந்து கொண்டார்கள், அதேபோல் அந்த போஸ்டரில் இருக்கும் மைக்கல் இளம் வயது விஜய் என கூறுகிறார்கள், அதேபோல் வயதான விஜய்யின் பெயர் ராயப்பன் என சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால் சிலர் வயதான விஜய்யின் பெயர் பிகில் என சிலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அது விஜய்யின் Id card ஆகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதிதான் அதேபோல் இவர் சீனியர் ஹெட் கோச்சராக நடிக்கிறார் இதோ அதற்கான ஆதாரம்.
