நேர்கொண்ட பார்வை தீம் மியூசிக் வெளியான இந்த நேரத்தில் பிகில் படத்தில் இருந்து வெளியான மாஸ் அப்டேட்.!

0

தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், இந்த நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆறு மணிக்கு நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து தீம் மியூசிக் காண தீ முகம் என்ற தீம் வெளியாகியுள்ளது, அதனால் சமூக வலைத்தளம் முழுவதும் அஜித் ரசிகர்கள் இதனைத் ட்ரெண்ட் செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதுபோல் விஜய் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளார்கள் பிகில் படக்குழு, விஜய் நடித்து வரும் பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கியுள்ளார், ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது பின்பு சோனி நிறுவனம் பிகில் போடலாமா என ரசிகர்களிடம் கேட்டது.

பின்பு சோனி நிறுவனம் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே என்ற பாடலை வருகின்ற 23ஆம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆக வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளாது நேரம் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை பின்பு வெளியாகலாம் என தெரிகிறது, இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.