சென்னையில் பிகில் காட்சியை தூக்கிய பிரபல திரையரங்கம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது, கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது, இந்த நிலையில் சில திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதேபோல் பிகில் திரைப்படம் ஆறு நாட்கள் முடிவில் திரையரங்கிற்கு கூட்டம் குறைந்துள்ளது, அதேபோல் திகில் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் கடந்துவிட்ட நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக நாளுக்கு நாள் வசூல் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கம் தேவி பாரடைசில் இன்று மாலை 3.15 மணிக்கு ஒரு காட்சி போட பட்டு இருந்தது ஆனால் திரையரங்கிற்கு சரியான கூட்டம் வரததால் அந்த காட்சியை ரத்து செய்துள்ளார்கள்.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.