விஜய்யின் பிகில் பட வழக்கு.! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு.!

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக முடிவடைந்த நிலையில் தற்பொழுது புரோமோஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது என கேபி செல்வா வழக்குப்பதிவு செய்து இருந்தார், இந்த கதையை ஏற்கனவே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்தார்.

மேலும் அந்த வழக்கில் படப்பிடிப்பு நடத்துவதற்கு படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்த வழக்கை எதிர்த்து அட்லி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் படக்குழு வக்கீல்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் இப்படி ஒரு வழக்கை தொடுத்துள்ளதாள் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்கள்.

பிகில் படக் குழுவில் இருந்து வாதங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் கேவி செல்வா வழக்கை திரும்பப் பெற கோரியும், புதிதாக ஒரு வழக்கை தொடரவும் மனு தாக்கல் செய்தார், ஆனால் நீதிபதியோ வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு ஒப்புக்கொண்டார்கள் ஆனால் மீண்டும் ஒரு வழக்கை தொடர்வதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.

அதனால் பிகில் பட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, மேலும் அவர் என்ற தீபாவளிக்கு திகில் திரைப்படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறி கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.