கடுமையாக ஒர்க் அவுட் பண்ணும் விஜய் பட நடிகை!! வைரலாகும் வீடியோ.

0

Bigil movie actress work out video viral: அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் விவேக், யோகி பாபு, இந்திரஜா, இந்துஜா என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இயல்பாகவே குண்டாக இருப்பார். ஆனால் இவருக்கு இருக்கும் திறமைகள் அதிகம். நடிப்பு, நடனம் என அனைத்திலும் தூள் கிளப்புவார். பிகில் திரைப்படம் வெளியாகும்போது இவர் குண்டாக இருக்கிறார் என்று சர்ச்சை எழும்பியது ஆனால் அதை எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே இவருக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பு என விருது வழங்கப்பட்டது

இந்திரஜா கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்திரஜா பார்க்க குண்டாக இருப்பது போல் இருந்தாலும் மிக அழகாக நடனம் ஆடுவார்.

இவர் நடனமாடும் வீடியோக்களை டிக் டாக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவார். அதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்துடன் சேர்ந்து காமெடி செய்து வீடியோக்களை பதிவிடுவார்.

அதுமட்டுமல்லாமல் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனையும் பதிவிடுவார். அந்த வகையில் இவர் தற்போது உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் கடுமையாக  உடற்பயிற்சி செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.