பிகில் பட நடிகருக்கு காவல் துறையில் கிடைத்த பதவி உயர்வு !! யார் அந்த நடிகர் தெரியுமா..

0
bigil3
bigil3

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த திரைப்படம்  பிகில். இந்த திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படக்குழு எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் விஜயுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஒருவருக்கு காவல்துறையில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பதவியை பெற்றுள்ளார்.

விஜய் இத்திரைபடத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் இதில் ராயப்பன் கேரக்டரை கொலை செய்யும் அலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஜயன்.

இவர் இதற்கு முன் கொம்பன், திமிரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவை சேர்ந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் இருந்துள்ளார்.

vijayan 1
vijayan 1

இவர் கேரள காவல்துறையின்கால்பந்தாட்ட அணியில் பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி கேரள அணிக்காக பல கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijayan2
vijayan2

மேலும் இந்த நிலையில் இவருக்கு கேரள காவல்துறை அசிஸ்டன்ட் கமாண்டன்ட் என்ற உயர் பதவியை அளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.