சென்னை பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கவிட்ட பிகில் ஆறாவது நாள் முழு வசூல் நிலவரம்.!

0

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிய திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் வசூலில் கல்லா கட்டி வருகிறது, கில் திரைப்படம் சென்னையில் ஒவ்வொரு நாளும் 1.75 கோடி வரை வசூலித்துள்ளது.

ஆனால் ஐந்தாவது நாட்கள் முதல் வசூல் அப்படியே குறையத் தொடங்கியுள்ளது, ஐந்து நாட்கள் முடிவில் ஐந்தாவது நாளில், லட்சக்கணக்கில் தான் வசூல் வந்துள்ளது, இந்த நிலையில் தற்போது ஆறாவது நாள் வசூல் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

பிகில் திரைப்படம் ஆறாவது நாளாக 58 லட்சம் மட்டுமே சென்னையில் வசூல் செய்துள்ளது இதன் மூலம் பிகில் திரைப்படம் ஒட்டு மொத்தமாக சென்னையில்  வசூல் 8.4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது , இந்த வார முடிவில் ரூ 10 கோடி மைல் கல்லை தொட்டுவிடும் சென்னை பாக்ஸ் ஆபிஸ்ல் என எதிர்பார்க்கப்படுகிறது.