நடிகர் விஜய் சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிகில் படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கி வருகிறார், மேலும் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்தார்கள், படக்குழு படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளன்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது, மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, கதிர், இந்துஜா என பலர் நடித்து வரும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தில் இருந்து எந்த ஒரு காட்சியும் லீக் ஆக கூடாது என பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த படக்குழுவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது ஏனென்றால் படத்தின் முதல் பாடல் மற்றும் இரண்டாவது பாடல் இணையதளத்தில் லீக் ஆகி வைரல் ஆனது இந்த நிலையில் 3 வது பாடலான ஹே புள்ள பாடலும் இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.
#bigilleaked 3rd song hey pulla #Verithanam #Singapenne #heypulla pic.twitter.com/jgghj4oQYN
— THALAPATHI (@Akb82509597) July 18, 2019