பிகில் படத்தில் இருந்து விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலும் லீக் ஆனது.! இதோ பாடல்

0
vijay bigil
vijay bigil

விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் பிகில்  திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள்.

பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது, பிகில் படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்துள்ளார், பெண்கள் கால்பந்து மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது, இதில் மகன் விஜய் பெயர் மைக்கேல் எனவும் அப்பா விஜய்யின் பெயர் ராயப்பன் எனவும் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே  என்ற பாடல் இணையதளத்தில் லீக் ஆகி வைரலானது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அதுமட்டுமில்லாமல் விஜய் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என முன்கூட்டியே படக்குழு அறிவித்திருந்தது, அதேபோல் விஜய் பாடியுள்ள வெறித்தனம் என்ற பாடல் தற்போது இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது, இதனால் படக்குழு மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள்,.

படத்தின் அப்டேட் வெளியாகக் கூடாது என பொத்தி பொத்தி பார்த்துக்கொண்டிருந்த ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டு பாடல்கள் இணையதளத்தில் லீக் ஆகி உள்ளதால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள், இப்படி இந்த பாடல்கள் லீக் ஆனது என குழப்பத்தில் இருக்கிறார்கள்.