ஆளுங்கட்சியை அலறவிட்ட தளபதி விஜய்.! இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும்.

0
bigil
bigil

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், நேற்று பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

எப்பொழுதும் தளபதி விஜய் படத்தின் ஆடியோ ரிலீஸ் மிகவும் பிரமாண்டமாக இருக்கும், இது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதேபோல் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்து உள்ளது.இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் வழக்கம்போல் தனது குறும்பான பேச்சுக்களாலும், பாடல்களாலும் அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

விஜய் திரைப்பயணத்தில் அதிக கால்சீட் கொடுக்கப்பட்ட திரைப்படமாக இந்த திரைபடம் அமைந்துள்ளது இந்த செய்தி ஏற்கனவே வெளியானது, இசை வெளியீட்டு விழாவில் விஜய் செய்த ஒவ்வொரு செய்கையும் இணையதளங்களில் வைரலாக வந்தன, அதேபோல் ஒரு நடிகரின் ஆடியோ வெளியீட்டு விழாவை மொத்த மீடியாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சர்கார் திரைப்படத்தில் விஜய் அரசியலில் தாக்கிப் பேசினார் அதேபோல் பிகில் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியலை தாக்கிப் பேசியுள்ளார், பிகில் இசை வெளியீட்டு விழாவில் வெறித்தனம் என்ற பாடலை பாடி மகிழ்ச்சியுடன் தனது பேச்சை தொடங்கினார், அவர் பேசியதாவது உலகத்திலேயே உழைத்தவர்கள் மேடையில் வைத்து அழகு பார்க்கிறவங்க ரசிகர்கள்தான் வேற லெவல் நீங்க என கூறினார்.

மேலும் வாழ்க்கையில் அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீர்கள் அதுதான் அவர்களே இருக்காங்களே நீங்க நீங்களா வாங்க என கூறினார்.
வாழ்க்கை கூட ஒரு கால் பந்துதான், நாம் முயற்சி செய்வோம் ஒரு கூட்டமே அத தடுக்க பார்க்கும். நம்ம கூட இருக்கறவங்களே நம்ம சைடு கோல் போடுவாங்க. யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க உங்களுக்காக ஒரு அடையாளத்தை உருவாக்குங்க.சமூக வலைதளங்களில் தேவையான விஷயங்களை மட்டுமே ட்ரெண்ட்  செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“என்னோட போட்டோவை என் பேனரை கேளுங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனா என்னோட ரசிகர்கள் மீது மட்டும் கை வைக்காதே என எச்சரித்துள்ளார். மேலும் யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அவங்கள அங்கு வெச்சா எல்லாமே நல்லா இருக்கும்.”

சமீபத்தில் பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ என்ற பெண்ணுக்கு உரிய மரியாதையை செலுத்தினார். மேலும் பேனரை வைத்த ஆட்களை கைது செய்யாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சகத்தின் மீதும் கைது நடவடிக்கை எடுத்தது எவ்வளவு கேவலமான விஷயம் என்பதையும் தனது வழக்கமான நக்கல் பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார். இதற்கு கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது.