பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு புதிய கெட்டப்பில் வர இருக்கும் பாடலாசிரியர் விவேக்.! என்ன ஒரு மாஸ் லுக்

0

தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்களும் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அப்பா கதாபாத்திரம் மற்றும் மகன் கதாபாத்திரம் பெண்கள் கால்பந்து விளையாட்டு அநியாயங்களை தட்டிக் கேட்பார் விஜய் என கூறப்படுகிறது.

கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் நடிக்கும் இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக முன்பே அறிவித்திருந்தார்கள் படக்குழு ஆனால் சமீபத்தில் தீபாவளிக்கு முன்பே இந்த திரைப்படம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சாய்ராம் கல்லூரியில் நடக்க இருக்கிறது, ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தளபதி ரசிகர்களின் அன்பை பெற்ற பாடலாசிரியர் விவேக் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள புதிய ஹேர்ஸ்டைல் மாற்றியுள்ளார், அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.