பிகில் படத்தின் அதிரடி அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

படத்தின் தயாரிப்பாளர் இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வந்துகொண்டே இருக்கும் என சமீபத்தில் அறிவித்திருந்தார், அந்தவகையில் ரசிகர்கள் பிகில் ஆடியோ லான்ச் எப்பொழுது எனக்கேட்டு நச்சரித்தார்கள் அதற்கான பதிலை தற்பொழுது ட்விட்டரில் அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

அதாவது பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது, இந்த நிகழ்ச்சியில் விஜயின் ஸ்பெஷல் இருக்கிறது எனவும் ஏ ஆர் ரகுமான் அவர்களின் லைவ் ஷோ இருக்கிறது எனவும் அட்லியின் பேச்சு என பல தகவலை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த இசை வெளியீட்டு விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.