தளபதி விஜயின் பிகில் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக இவர்தான்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமான வெளியாக இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது, அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை திரையிடப்படும் என அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் பெண் ரசிகைகளுக்கு மட்டும் ஒரு போட்டியை அறிவித்துள்ளார் விஜே ரம்யா சுப்ரமணியம், இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

பிகில் இசை வெளியீட்டு விழாவை ரம்யா தான் தொகுத்து வழங்குவார் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.