இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் சொன்ன குட்டி கதை இதுதான்.! இதில் இதுல இவ்வளவு அர்த்தமா.!

0
Bigil
Bigil

தளபதி விஜய் எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ஒரு குட்டி கதை சொல்வது வழக்கம் தான், அப்படி இல்லை என்றால் பஞ்ச் வசனம் கூறுவார், சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் பேசியது பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அதேபோல் தற்போது பிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய், குட்டி கதை கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

“பூக்கடையில் ஒருத்தன் வேலை பார்த்துகிட்டு இருந்திருக்கான். பொக்கே ஷாப்னு வெச்சுக்கோங்க. திடீர்னு அவனுக்கு அங்க வேலை போய்டுச்சு. இவன் எங்கு வேலை செய்தான் என தெரியாமலேயே அவனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் அவரின் பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார்.”

“வெடி கடையில் அவனை உட்கார்ரச்சிடுறாங்க. அங்கு ஒரு வெடி கூட விக்கலையாம். என்னடானு பார்த்தா. 10 நிமிஷத்துக்கு ஒருமுறை வாளியில் தண்ணீர் எடுத்து கொண்டு சென்று அவன் பட்டாசு மீது தெளித்துள்ளான். தொழில் பக்தி அவனை விட்டு போகல.

யார் மேல தப்பு. The moral of the story is.. இந்த வேண்டியவன் வேண்டாதவன் என்பதை விட்டுட்டு திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கணும். எவனை எங்க உட்கார வைக்கணுமோ அவனை அங்கங்க கரெக்ட்டா உட்கார வைக்கணும்” என விஜய் கதையை கூறி முடித்துள்ளார்.