விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் ஆக வெளியிடப்பட்டது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, மேலும் அட்லி இயக்கிய தெறி மெர்சல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மெர்சல் மற்றும் சர்க்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது, அதேபோல் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளார்கள் சமீபகாலமாக முக்கிய பண்டிகை என்றாலே பெரிய நடிகர்களின் படம் தான் ரிலீஸ் ஆகிறது.
கடந்த பொங்கலுக்கு பேட்ட திரைப்படமும் விஸ்வாசம் படமும் திரைக்கு வந்து இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றது, அதேபோல் இந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் மோத இருக்கிறது, இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசிகண்ணா நடித்துள்ளார் மேலும் நிவேதா பெத்துராஜ் சூரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் இப்படத்தை விஜய் சந்தர் தான் இயக்கி உள்ளார், இரண்டு திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாவதாள் எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.