பிகிலுடன் மல்லுக்கட்டும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது இதோ ரிசல்ட்.!

0
bigil kaithi
bigil kaithi

விஜய் நடித்து முடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் தளபதி 64 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார், இவர் இதற்கு முன் மாநகரம், கைதி ஆகிய திரைப்படத்தை இயக்கியுள்ளார், இவர் கார்த்தியை வைத்து இயக்கிய உள்ள கைதி திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் கைதி படத்தை சென்சார் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது, அவர்கள் படத்தை பார்த்துவிட்டு யுஏ(U/A) சான்றிதழ் கொடுத்துள்ளார்கள், இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, அதுமட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் லவ், ரொமான்ஸ் எதுவுமே இருக்காது எனவும் கூறியுள்ளார்கள்.