வசூலில் சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடிய பிகில்.! அப்போ கைதியின் நிலை?

0

கடந்த தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் பிகில் மற்றும் கைதி, பிகில் திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார், அதேபோல் கைதி திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், கடந்த 10 நாட்களாகவே எங்கு திரும்பினாலும் பிகில் பிகில் பிகில் தான்.

பிகில் திரைப்படத்தை குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று பார்க்கிறார்கள், சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் இந்த நிலைமைதான், பகலில் சுமாராக கூட்டம் வந்தாலும் இரவு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் தான், அதுவும் விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம் கூட்டம் அலைமோதுகிறது விஜய்யின் திரைப்பயணத்தில் பிகில் திரைப்படம் மிகப்பெரிய கலெக்ஷனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகியுள்ள கைதி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, இந்த திரைப்படம் கார்த்தியின் சினிமா பயணத்திலேயே அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய மார்க்கெட் என கூறப்படும் சென்னையில் பிகில் திரைப்படம் மற்றும் கைதி திரைப்படத்தின் வசூல் விவரங்களை பார்ப்போம்.

சென்னையில் பிகில் திரைப்படம் சுமார் 10.79 கோடி வசூல் செய்துள்ளது, அதேபோல் கைதி திரைப்படம் 3.10 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.