தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் இவரைப் பற்றிப் பல பிரபலங்கள் ஊடகங்கள் முன்பு பேசியுள்ளதை நாம் கண்டுள்ளோம்.பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கமல் தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் வனிதாவும் ஒருவர் , இவர் ரசிகர்களால் விமர்சிக்கபட்டவர்.
இந்த நிலையில் பிக்பாஸ் குடும்பம் மட்டும் விமர்ச்சிக்காமல் தமிழகமே இவரை விமர்சித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இவரால் பல குழப்பங்கள் ஏற்பட்டது இதனை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டார் பின்பு நன்றாக போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் திரும்பவும் ரீ என்ட்ரி கொடுத்த வனிதாவை பார்த்து போட்டியாளர்கள் அதிர்ந்து போனார்கள்.
திரும்பவும் வனிதா போட்டியாளர்களை சண்டைக்கு இழுத்து மட்டுமல்லாமல் விமர்சித்து வந்தார்.இதனையே தொழிலாக வைத்து இருந்தால் அவர் இதை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொதுமக்கள் வனிதா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் யாரையும் விமர்சிக்காமல், சண்டை போடாமல் இருந்தால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்குமென கூறியுள்ளனர்.

இந்தநிலையில் வனிதா அவர்கள் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். உங்களுக்குத்தான் தல எனக்கு ஜென்டில்மேன் என கூறியிருந்தார் அதுமட்டுமில்லாமல் மனைவிக்கு நல்ல கணவர் அவருடைய குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் மேலும் அவர் கூறியது தல அஜித் அவர்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இன்று வரை என்னிடம் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார் என கூறியுள்ளார்.