பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் சிம்பு.! ஆத்தாடி அதுக்குன்னு இவ்வளவா.!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டது இந்த நிலையில்  தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் இந்தியா முழுவதிலும் நம்பர்-1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது பரபரப்பு மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ott இணையதளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் முதல் சீசனில் இருந்து சினேகன் ஜூலி, சுஜா வருணி, ஆகியவர்களும்  இரண்டாவது சீசனில் இருந்து ஹரி, தாடி பாலாஜி அதுமட்டுமில்லாமல் மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ், மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி 5 வது சீசனில் இருந்து தாமரைச்செல்வி, ஸ்ருதி, அபிநய் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜாவாருணி, ஹாரி, அபினை  மற்றும் வனிதா ஆகியோர்கள் தானாகவே முடிவு எடுத்து வெளியேறி விட்டார்கள் இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் தேர்வுகளில் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாசை தவிர மீதம் உள்ள எட்டு பிளேயர் நாமினேட்  செய்யப்பட்டுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கமலின் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது அதாவது பணி சுமை அதிகரித்ததால் இதிலிருந்து அவர் விலகியுள்ளார் படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளில் தொடர்ந்து பிசியாக இயங்கி வருகிறார்.

இந்த நிலையில் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்து இருந்தார் அதனால்  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்புதான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில் ஒரு நாளைக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக சிம்பு வாங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment