பிக்பாஸ் அல்டிமேட்டில் இணைந்த மற்றொரு போட்டியாளர்.! அடடா எல்லாரையும் கதரவிடுவாறே இவர்..

விஜய் தொலைகாட்சி ஒவ்வொரு வருடமும் புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி டி ஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது சமீபத்தில்தான் பிக் பாஸ் 5 வது  சீசன் முடிவடைந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றிக்குப் பிறகு புத்தம் புதிதாக பிக்பாஸ் அல்டிமேட் தொடங்க இருக்கிறது.

இந்த சீசனில் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அதேபோல் நேரடியாக இந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டார் இல் தொடர்ந்து 24 மணிநேரமும் ஒளிபரப்பாகிறார்கள் என அறிவித்துள்ளார்கள்.  அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வந்தது.

கடந்த ஐந்து பிக் பாஸ் சீசன் களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் புதிதாக தொடங்கியிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதன் முதலாக சினேகன் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதனை ஹாட் ஸ்டார் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி என்பவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் அதன் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலி பிக்பாஸ் வீட்டில் செல்வதால் ரசிகர்களுக்கு சரியான என்டர்டைன்மென்ட் இருக்கிறது என சமூக வலைதள வாசிகள் கூறி வருகிறார்கள்.

சும்மாவே ஜூலி ஓவராக பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் இல் கலந்துகொள்ள இருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்து தான்.

Leave a Comment