வந்தவுடனே தனது ஆட்டத்தை ஆரம்பித்த சுசித்ரா.! கடுப்பில் சக போட்டியாளர்கள்.!

0

இன்று பிக் பாஸ் வீட்டுக்கு  ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் வந்தவர் பாடகி சுசித்ரா. இவர் வீட்டிற்கு வந்ததுமே ஹவுஸ் மெட்டுகள் ஆர்வமாக பார்த்து வரவேற்கின்றனர்.

வீட்டுக்குள் உள்ள சுசித்ரா அர்ச்சனா கொடுத்தது போல போட்டியாளர்களுக்கு இமேஜ் பட்டம் அளிக்கிறார். முதலில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு நீங்கள் கூறும் கருத்துகளில் உங்களுக்கே நம்பிக்கை இல்லை எனக்கூறி பட்டத்தை வழங்குகிறார்.

மேலும் அதனைத் தொடர்ந்து ரியோவிற்கு நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் உங்களது தேடல் என்னவென்றே தெரியவில்லை எனக் கூறி இமேஜை கொடுக்கிறார்.

இப்படி ஒவ்வொரு ஹவுஸ் மேட்டுக்காக தொடர்ந்து பட்டம் அளித்து அர்ச்சனாவிடம்  நீங்கள் யாரையும் பேச விடுவதே இல்லை எனக் கூறி பட்டத்தை வழங்குகிறார். இதைப் பார்த்தால் ஆரம்பமே பயங்கரமாக உள்ளது என தெரிய வருகிறது. இதோ அந்த வீடியோ

சுசித்ராவின் ஆட்டம் ஆரம்பம்.