விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பதினேழு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் ஷெரின் மற்றும் சாக்ஷியும் ஆவார்கள்.
பிக் பாஸ் மூன்றாவது சீசன் முடிவடைந்த நிலையில் முகேன் முதலிடத்திலும் சாண்டி இரண்டாம் இடத்திலும் லாஸ்லியா மூன்றாவது இடத்தையும் பிடித்து இருந்தார். இதனை தொடர்ந்து சாண்டி வீட்டில் கவின், தர்ஷன், தர்ஷன் தங்கை அபிராமி, முகேன், முகேன் நண்பர்கள், தங்கை என அனைவரும் சென்று லாலா பாபாவுடன் விளையாடினார்கள்.
அதேபோல் சாக்ஷி மற்றும் ஷெரின் தனி கூட்டணி அமைத்து பார்ட்டிகள் சென்றிருந்தார்கள், இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்று சேரனை பார்த்து பேசி விட்டு, சாப்பிட்டுவிட்டு அவரின் மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.
அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷெரின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இவர்கள் இருவரும் சேரன் மகளுடன் அடித்த லூட்டியை வழக்கம்போல் சேரன் பார்த்துக்கொண்டு அமைதியாக ஓரமாய் அமர்ந்து கொண்டு இருந்தார்.
Such a genuine person!! Loved every bit of today❤️❤️❤️ @directorcheran #sakshiagarwal #SherinShringar pic.twitter.com/Y81c7ZOd6U
— Sakshi Agarwal (@ssakshiagarwal) October 9, 2019