பிக்பாஸில் ரகசிய அறை.! முதல் முறையாக பயன்படுத்தும் போட்டியாளர் யார் தெரியுமா.?

0

விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த சீசனில் இந்த வார நாமினேஷனில் சேரன், சாண்டி  தர்ஷன் மற்றும் கஸ்தூரி ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக மடமடவென 4 பேர் வெளியேறிவிட்டார்கள். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

இதற்காக பிக்பாஸ் ரகசிய அறையை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன, கடைசியாக இரண்டு வாரங்களில் சரவணன் மற்றும் சாக்ஷி மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய 4 பேர் வெளியேறிவிட்டார்கள். இதுவரை நடந்த பிக்பாஸ் சீசனில் நான்கு போட்டியாளர்கள் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

அதனால் போட்டியாளர்களை தக்கவைத்துக்கொள்ள ரகசிய அறையை பயன்படுத்த இருக்கிறார் பிக் பாஸ்.  அதேபோல் இந்த வாரம் நாமினேஷனிள் மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்து உள்ளது கஸ்தூரி தான், இவர்தான் ரகசிய அறைக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸில் இதற்கிடையில் ஒரு பிரபலம் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.