தர்ஷன் காதலியுடன் மல்லுக்கட்டும் பாலாஜி முருகதாஸ்!!! அடுத்த ஜூலியா இருப்பாங்க போல….

0

biggboss season4 sanam sheddy fight with balaji murugadass: மக்கள் பொழுதுபோக்குக்காக பார்க்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியின் ஒரு சில விதிமுறைகள் உள்ளன. அதில் செல்போன், டிவி மற்றும் சமூக வலைதள சம்பந்தமான எதுவுமே பயன்படுத்தக்கூடாது என்று விதிமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிக் பாஸ் இல் ஒவ்வொரு சீசனிலும் சந்தோஷமான காட்சிகள் விட சண்டைக்காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றது. அதற்கு காரணம் ஒருவரின் ஒருவர் குறை சொல்லும் குணம்.

இந்த நிலையில் அனிதா சம்பத்துக்கும் குறும்புக்காரான சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ஆரம்பத்திலேயே சண்டை உருவானது. அவர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் புதிதாக களமிறங்கிய சனம் ஷெட்டி மற்றும் ரேகா இருவருக்கிடையே கருத்து வேறுபாட்டினால் பிரச்சனை கிளம்பியுள்ளது.

அந்தப் பிரச்சினை முடிவதற்குள் பாலாஜி முருகதாசூக்கும் சனம் ஷெட்டிக்கும் புதிதாக ஒரு சண்டை கிளம்பியுள்ளது. இந்த பிரச்சனை கிச்சனில் ஆரம்பித்தது. அதாவது சமையல் கட்டில் அனைவருக்கும் ஜூஸ் போடும்போது சனம் ஷெட்டி ஜூஸ் கையில் படாமல் போடுங்கள் என்று மூஞ்சியில் அடித்த மாறி கூறியவுடன் கோபம் தாங்க முடியாத பாலாஜி முருகதாஸ் அப்படின்னா குடிக்காதீங்க என்று பதில் கூறி சனம் ஷெட்டிக்கு பதிலளித்தார்.

இதனால் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே கார்டனில் சண்டை ஏற்பட்டது.அதாவது அழகு போட்டி வைக்கும் ஒரு கம்பெனியை போலி என்று சொல்கிறார்.

அது போலி என்று உனக்கு தெரியுமா என சண்டை வர அதற்கு அவர் நிறுபிக்ககிறேன் எனவும் அனைவரும் முன்பும் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சனம் ஷெட்டிக்கு சவால் விடுத்துள்ளார். இதன்காரணமாக ரசிகர்களிடையே இவர்களின் மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.