விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் 2017ஆம் ஆண்டு புதிதாக விஜய் டிவியின் மூலம் அறிமுகமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடையாத அல்லது முகம் தெரியாத பலரும் கலந்துகொண்டு பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் தற்போது பிரபல இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து.சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நான்காவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்ற நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. எனவே ஐந்தாவது சீசனுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சி பொதுவாக ஜூன் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி அந்த வருடத்தின் முடிவில் நிறை பெற்று விடும். ஆனால் தற்போது கொரானா பிரச்சினையினால் இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஜனவரி மாதம் இறுதியில் தான் நிறைவுற்றது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி முடிந்து சில மாதங்களிலேயே தற்போது சீசன் 5 அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் நடிகை சகிலாவின் மகள் பங்குபெற உள்ளாராம். ஷகிலா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் திருநங்கை பெண் அதுவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அவருடைய பெயர் மீலா அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி நடிகையாகவும் சினிமாவில் கலக்கி வந்த ஷகிலா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டு மம்மி என்ற அந்தஸ்துடன் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதன் மூலம்தான் ஷகிலாவின் மகள் நீலாவை பற்றியும் அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் கண்டிப்பாக மேலா பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை காத்திருக்கவும்.