பிக்பாஸ் வீட்டில் டூயட் ஆடும் சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத்!! ப்ரமோ வீடியோ..

0

biggboss season 4 day10 promo1 anithasampath sureshchakravarthy duet video: பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நேற்று ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நேற்று வெளிவந்த ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

கடந்த மூன்று வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் யாரை வெறுக்கிறார்களோ அவர்களையே ஓட்டு போட்டு வெளியே அனுப்பினார்கள். ஆனால் புதிதாக ஒரு எலிமினேஷன் ப்ராசஸ் கொண்டுவரப்பட்டது. இதை புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தற்போது தெளிவாக உள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் எவிக்சன் பிரீ பாஸ் டிக்கெட் ஆஜித்துக்கு சென்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மிகவும் சிறப்பாக நேற்று விளையாடி இருந்தார். அவர்  விளையாடியதைப் பார்த்து ரசிகர்கள் அவரைப் பாராட்டினர். மேலும் ஹவுஸ் மேட்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் அனிதாசம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மாடர்ன் உடையில் டூயட் பாடுவது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் உண்டாக்கியுள்ளது. மேலும் கடந்த இரண்டு தினங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாகவும் கலகலப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது. இதோ அந்த ப்ரமோ வீடியோ.