முதன் முறையாக தனது இரண்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சரவணன்.! வைரலாகும் புகைப்படம்

0

பிக்பாஸ் வீட்டிலிருந்து தான் கூறிய கருத்தால் சர்ச்சையில் சிக்கி வெளியேறியவர் சரவணன் இவர் தற்போது தனது இரண்டு மனைவிகளுடன் மற்றும் மகனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது சரவணன் தனது மனைவி மற்றும் மகன் பற்றி பேசி இருந்தார், அதில் முதல் மனைவி இருக்கும் போதே வாரிசுக்காக தான் ஆண்மகன் என்று நிறுபிப்பதற்காகவும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என நெகிழ்ச்சியாக பேசினார்.

அதுமட்டுமல்லாமல் தனது இரண்டாவது திருமணத்தை தனது செலவில் தனது முதல் மனைவி முன்னே நின்று நடத்தி வைத்தார் என தெரிவித்தார், மேலும் சரவணன் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் பொழுது தனது இரு மனைவிகளையும் ஒன்றாக விட்டுவிட்டு வந்துவிட்டேன் எனக்கு பயமாக இருக்கிறது என்று காமெடியாக கூறினார்.

ஆனால் சரவணனின் இரண்டு மனைவிகளையும் யாரும் ஒன்றாக கண்டிருக்க முடியாது இந்த நிலையில் சரவணன் தனது மகன் மற்றும் இரண்டு மனைவிகளுடனும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது.

saravanan
saravanan