லாஸ்லியாவுக்கு அடிச்ச பம்பர் லாட்டிரி!! அவங்க காட்டுல ஒரே பணமழை..

0

biggboss losliya has more money because of her lucky: விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட லாஸ்லியா ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

இவர் இந்நிகழ்ச்சியில் கவினை காதலித்தது தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று கூறலாம். பிக் பாஸ் சீசன் 1 இல் எப்படி ஓவியா மற்றும் ஆரவ் அனைவரையும் கவர்ந்தார். அவர்களைப் போலவே லாஸ்லியா மற்றும் கவின் அனைத்து ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தார்கள்.

லாஸ்லியா இலங்கையை சேர்ந்த பெண் ஆவார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தாராம். இந்த நிலையில் தற்போது லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இதனை தொடர்ந்து ஹீரோயினாக இரண்டு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார் மியூசிக் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு வரி காணாமல் போகிவிடும். அதனை லாஸ்லியா தான் கண்டுபிடித்து கூறவேண்டும் லாஸ்லியா அந்தப் பாடலின் வரியை கரெக்டாக பாடி வெற்றி பெற்றார்.

எனவே லக்கி ரூமில் சென்ற லாஸ்லியா ஒரு லட்சம் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் அவ்வப் போது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு  நல்ல நேரம் போல பெரிய அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.