சோப்பு விளம்பரத்திற்கு முன்பே லாஸ்லியா நடித்த விளம்பரம்.!! வைரலாகும் வீடியோ.

0

losliya advertisement before soap advertisement video viral:பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  அந்த அளவிற்கு ஓவியாவிற்கு பிறகு இவருக்கு தான் பிக்பாஸில் நல்ல புகழ் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது இவர் பிரபலம் ஆகியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தற்போது மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார் இவரது மார்க்கெட் கூடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸில் புகழ் பெற்றவர் யார் என்றால் அது லாஸ்லியா என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இவருக்கு பல திறமைகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் முதன்முதலாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் என வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்னாடியே இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் விளம்பரத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா எவ்வளவு அழகாக விளம்பரத்தில் நடித்துள்ளார் என கூறிவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.