பேரை கெடுத்துகிட்டு வெளியேறிய கம்ருதீன்.. மகாநதி சீரியல் வாய்ப்பும் போச்சா

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகுந்த பரபரப்புடன் ஒளிபரப்பானது. பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து துரத்திவிட்ட வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரின் செய்கைகள் யாருக்குமே பிடிக்கவில்லை. இதுக்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா என ஆடியன்ஸ் புலம்பி வந்த நிலையில் அதற்கான வாய்ப்பை இவர்களே உருவாக்கி விட்டனர்.

உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என ரெட் கார்டு வாங்கிக்கொண்டு தற்போது இருவரும் வெளியேறி இருக்கின்றனர். இதில் பார்வதி வழக்கம் போல இன்ஸ்ட்டாவில் ஸ்டோரி வைத்து எல்லோரையும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் கம்ருதீன் நடித்து வந்த மகாநதி சீரியலில் இருந்து அவரை தூக்கி விட்டார்கள் என்ற செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மைதானா என விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி சீரியலில் அவருடைய கேரக்டர் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆவது போல் காட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல போகிறேன் என்றதுமே கதையை இப்படி கொண்டு சென்று விட்டார்கள்.

தற்போது சீரியலின் போக்கு வேறு டிராக்குக்கு மாறிவிட்டது. அதனால் கம்ருதீன் கேரக்டர் அத்தோடு முடிந்து விட்டதாக சீரியல் தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் வெறும் வதந்தி தான்.

உண்மையில் சீரியலில் அவருடைய கேரக்டர் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவரை வேறு ஒரு சீரியலில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.