பிக்பாஸ் வீட்டில் விளையாடியதற்கு இசைவாணி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சொன்னா அசந்து போவிங்க..

0

சின்னத்திரை வெள்ளித்திரைக்கு இணையாக பல ரியாலிட்டி ஷோக்களை வழங்கி மக்களை தன் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அதில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சீசனை  தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாம் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்களிடையே கேள்வி எழும்பியுள்ளது.

அதற்கு ஒரு பக்கம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் கூறி வருகின்றனர். மேலும் நடிகர் சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரிக நுழைந்துள்ளார்.

அதனையடுத்து தற்பொழுது நடன இயக்குனர் அமீர் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக அறிமுகமாகி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 போட்டியாளர்கள் எலிமினேஷனில் இருந்து வெளியேறினர். அந்த வகையில் சென்ற வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இசைவானி வெளியேறினார்.மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் 49 நாட்கள் தாக்குப் பிடித்து உள்ளார்.

தற்போது இசைவாணி குறித்து தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் என அவர் இருந்த  நாட்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது 7 லட்சம் ரூபாயை கையோடு கொண்டு சென்று என்று உள்ளாராம் செய்தி தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.