இளம் வயதிலேயே மாரடைப்பால் மறைந்த பிக்பாஸ் பிரபலம்.! சோகத்தில் ரசிகர்கள்.!

இந்தியாவில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் தொடரை சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக பங்கேற்று அதில் வெற்றி பெற்றவர்தான் நடிகர் சித்தார்த் சுக்லா.

இவர் பாலிகா வது என்ற ஹிந்தி தொடரில் ஷிவ்வாக கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு வருண் தவான்  நடிப்பில் வெளியான ஹம்டி ஷர்மா கி தூல்ஹானியா என்ற திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பால் ஸ்டார் டஸ்ட் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த திருப்புமுனை நடிப்பு விருதும் பெற்றார்.

அதன் பின்னர் சித்தார்த் சுக்லா இவர் கலர்ஸ் டிவியின் கத்ரோன் கே கிலாடி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றார்.அதன் பிறகு அவர் கலர்ஸ் டிவியில் தில் ஸே தில் தக் என்ற இந்தி தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவருக்கு 40 வயதான நிலையில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு இவருக்கு சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

Sidharth Shukla
Sidharth Shukla

அவரது இந்த திடீர் மரணத்தால் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் திரையுலகினர் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்பிறகு ரசிகர்களும் இவருக்கு வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment