தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வரவேற்பில் இருக்கும் திரைப்படம் தான் தளபதி 67 இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை சென்று வெளியேறிய ஒருவர் தளபதி 67 இல் நடிக்க இருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீப காலமாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது ஆனாலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறது படக்குழு.
இந்த நிலையில் தற்பொழுது தளபதி 67 ல் நடிக்க இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை சமீப காலமாக அறிவித்து வருகிறது பட குழு. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் பிரபல நடன இயக்குனரும் பிக் பாஸ் பிரபலமான சாண்டி தற்பொழுது நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பைனல் வரை சென்று வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி மாஸ்டர் நடிக்க இருக்கிறார் இவர் ஏற்கனவே 3:33 என்ற பேய் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் தளபதி 67 வாய்ப்பு கிடைத்தது குறித்து சாண்டி மாஸ்டர் கூறுகையில் இது ஒரு ஸ்பெஷல் பீலிங்ஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கும் பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக இருக்கிறது தளபதி விஜய் சாருடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.