பழனி முருகனுக்கு காவடி தூக்கும் பிக்பாஸ் காயத்ரி ரகுராம்!! வைரலாகும் வீடியோ.

0

biggboss dance master gayathri raguram video:நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு நடன இயக்குனராக இருந்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல்  கலந்து கொண்டு  மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பிக்பாஸில் இருக்கும் போது இவர் செய்த செயலாள் சொர்ணாக்கா என்று அழைக்கப்பட்டார்.மேலும் அதுமட்டுமல்லாமல் இவர் பாஜக கட்சியில் சில வருடங்களாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காட்சியில் இவருக்கு  கலை மற்றும் கலாச்சார பிரிவில் செயலாளராக பதவி அளித்தனர். அதாவது காயத்ரி ரகுராம் தற்போது பழனிக்கு காவடி தூக்கி தரிசனம் செய்துள்ளார். அதாவது பொதுவாகவே பழனியில் காவடி தூக்கி முருகனை தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஒரு எண்ணம்.

அந்த வகையில் காயத்ரி ரகுராம் கட்சியில் இன்னும் பெரிதாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலில் காவடி தூக்கி தரிசனம் செய்வதாக பேசப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த காயத்ரி ரகுராம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் இன்னும் சிலர் பாஜகவில் இணைய உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதோ வீடியோ.