5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 5000 ரூபாய்க்கு நடிக்கிறாங்க என பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த விஜய் டிவியின் தொகுப்பாளினி…

biggboss contestant overact vijay tv leading anchor tweet viral: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 பற்றி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான வி ஜே பாவனா அவர்கள் விஜய் டிவியிலிருந்து தற்போது  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தற்போது ஐபிஎல் போட்டிக்காக 50 நாட்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். மேலும் இந்த நிலையில் அவர் போட்ட  ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தான் குடும்பத்தை விட்டு பிரிந்து 50 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது ஆனால்  நான் ஏமோஷன் ஆகவில்லை. ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூன்று வாரங்களிலேயே அங்குள்ளவர்களை அம்மா, அக்கா, தம்பி என கூப்பிடுவது அபத்தமாக உள்ளது என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை கலாய்த்து உள்ளார்.

இதில் ஷாக் என்னவென்றால் விஜய் டிவியின் தொகுப்பாளினியே  விஜய் டிவி நடத்தும் ஷோவை கழுவி ஊத்துவது தான் என ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்த ட்விட்.

bhavana-twit
bhavana-twit

Leave a Comment