ரம்யா பாண்டியனுக்கு தூண்டில் போட்ட பிக்பாஸ் பிரபலம்.. ! விரால் மீன் சிக்கும் சுறா மீன் சிக்குமா?

0

biggboss contestant fall in love with ramyapandiyan: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன் முடிவடைந்து தற்போது 4வது சீசன் உதயமாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்த நிகழ்ச்சிகள் தற்போது லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அந்த வகையில் தற்போது ஷிவானி மற்றும் பாலாஜியின் காதல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு காதல் எழ போகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

அது வேறு யாரும் கிடையாது ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சேகரும் தான். அந்த வகையில் சமீபத்தில் நடந்த மணிகூண்டு டாஸ்க்கில் பெண் பார்க்கும் ஈவன்ட் நடைபெற்றது. மேலும் கடந்த டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் மற்றும் சோமசேகர் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்தது ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்த டெஸ்டில் இவர்களுக்குள் ஏதோ இருக்கிறது என குண்டை தூக்கிப் போட்டது போல அர்ச்சனா அவ்வபொழுது மாமி வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அர்ச்சனாவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் மற்றொரு காதல் மலர போகிறது என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சோம் சேகரும் அடிக்கடி ரம்யாவுக்கு வலையை விரித்து கொண்டு தன் இருக்கிறார். ரம்யா சோமுவின் வலையில் விழுவார மாட்டாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.