கடலுக்கு நடுவில் கும்மாளம் அடிக்கும் ஷிவானி.! அட நீங்களுமா இப்படி என ஷாக் ஆகும் ரசிகர்கள்

நடிகை சிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த ‘பகல் நிலவு’ என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.  இவர் இந்த சீரியலுக்கு முன்பு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

19 வயதிலேயே சீரியலில் நடிக்க வந்த ஷிவானிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் முதன்முதலில் சிறுவயதிலேயே தெலுங்கு துறையில்தான் தனது பயணத்தை தொடங்கினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 2 கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

shivani

ஆனால் இவர் பிக் பாஸ் சீசன் இல் கலந்து கொள்வதற்கு முன்பு சமூகவலைதளத்தில் நாலு மணி காட்சி என அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதைப்பார்த்த பிக் பாஸ் பிரபலம் ஏன் இதுபோல் புகைப்படத்தை வெளியிடுகிறீர்கள் எனக் கேட்டார்.

அதன் பிறகு சிறிது காலம் குடும்ப குத்துவிளக்காக புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இது சரிப்பட்டு வராது என மீண்டும் தனது பாணியில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி ஒரு படி மேலே சென்று புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

தற்பொழுது இவர் கையில் கிளாஸ் உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா இப்படி கும்மாளமுமாக இருக்கிறீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

Exit mobile version