பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் எல்லாம் மீண்டும் வீட்டுக்குள் வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் இந்த செலிப்ரேஷன் வாரம் ஜாலியாக நகரும்.
ஆனால் இந்த சீசனில் வந்ததுமே சிலர் வெளியில் நடப்பதை சொல்லி பிரச்சனையை தொடங்கினார்கள். அதேபோல் வன்மத்தை கொட்டும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் திவ்யாவை சுற்றி சுற்றி வந்து கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். அதிலும் வெளிப்படையாகவே ப்ரொபோஸ் செய்து திவ்யா ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
திவ்யா எங்கு இருக்கிறாரோ அங்குதான் திவாகர் இருக்கிறார். தேவையில்லாமல் சேட்டை செய்வது எக்ஸ்ப்ரஷன் என்ற பெயரில் சிரிப்பு மூட்டுவது என அவர் செய்யும் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை சோதிக்கிறது.
திவ்யா சில நேரங்களில் இதை சிரிப்புடன் கடந்து சென்றாலும் பல நேரங்களில் கோபத்தை இழுத்து பிடித்து பொறுமை காப்பது தெரிகிறது. நம்ம அக்காவோட கோபம் எப்படி இருக்கும்னு இவருக்கு தெரியல.
தர்பூசணி நட்சத்திரத்திற்கு கட்டம் சரியில்ல, போறதுகுள்ள திவ்யா கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டு தான் போவாரு என சோசியல் மீடியாவில் நக்கல் கமெண்ட்டுகள் பரவிக் கொண்டிருக்கிறது.