இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பிக் பாஸ் சீசன் கடும் அதிருப்தியை பெற்றுள்ளது. கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாத போட்டியாளர்கள், வன்மத்தை கொட்டும் முகங்கள் என இதுவரை பார்த்த சீசன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது இந்த ஒன்பதாவது சீசன்.
எப்படியோ இறுதி நிலைக்கு வந்தாச்சு. இந்த வாரம் செலிப்ரேஷன் வீக் என்ற பெயரில் பழைய போட்டியாளர்கள் எல்லாம் வீட்டுக்குள் வந்து அலப்பறை செய்து கொண்டிருக்கின்றனர்.
வெளியில் பார்த்த விஷயங்களை லைட்டாக பத்த வைத்து, பாரு இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் முழுவதும் மணி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது.
அதில் பணப்பெட்டியை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. நேற்றைய நிகழ்வில் ஒவ்வொருவரும் சில பேருடைய மண்டையை கழுவும் வேலையை செய்து வந்தார்கள்.
அதில் அரோரா கானா வினோத் பணப்பெட்டியை எடுக்கும்படி மூளை சலவை செய்து கொண்டிருந்தார். அவர் செய்த வேலை வொர்க் அவுட் ஆகிவிட்டது. அதன்படி கானா வினோத் 18 லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். ஏனென்றால் இவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என எல்லோரும் காத்திருந்தனர். கடைசியில் அவர் வந்தவரை லாபம் என பெட்டியை எடுத்துச் சென்றது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.