BIGGBOSS 7 : கூடி சிரிச்சு விளையாடுவோம் போட்டின்னு வந்தா வச்சி செய்வோம்.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஒரே ஒரு நபர்

BiggBoss 7 Promo : விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சீசன் சீசனாக  நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது ஏழாவது சீசன் 60 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

இந்த சீசனில் கடந்த வாரம் அதாவது ஒன்பதாவது வார எவிக்ஷனில் ஜோவிகா வெளியேறினார்.  இவர் இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிலேயே மிகக் குறைந்த வயதுடையவர்.. இருந்தாலும் முடிந்த அளவு தனது திறமையை வெளிப்படுத்தி சூப்பராக விளையாடி வந்த ஜோவிகா சென்ற வாரம் வெளியேறியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனா.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய “ஜோவிகா” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன.. அதில் இந்த வார நாமினேஷன்  நடக்கிறது.. போட்டியாளர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக கன்ஃவென்ஷன் ரூமிற்கு போய் நாமினேட் செய்கின்றனர்.. அப்பொழுது மணி, கூல் சுரேஷ், தினேஷ், அர்ச்சனா, மாயா போன்ற எல்லோரும் நிக்சனை நாமினேட் செய்கின்றனர்.

கொஞ்ச நேரம் கழித்து பிக் பாஸ் இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸில் தேர்வானவர்கள் நிக்சன் என்று சொல்லும் போது போட்டியாளர்கள் எல்லோரும் நிக்ஸன் மட்டும் தானா என்று ஷாக் ஆகின்றனர் பிறகு பிக்பாஸ் வேறு  யாருடைய பெயரோ சொல்ல வருகிறார் அதுவும் நிக்சன் என்று சொல்லும் பொழுது எல்லோரும் அப்பா இந்த வாரம் நிக்சன் மட்டும் தானா.?

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனா.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய “ஜோவிகா” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

நம்ம எல்லோரும் தப்புச்சோம் என்று சந்தோஷப்படுகின்றனர் ஆனால் இதை கேட்டு நிக்சன் ஷாக் ஆகிறார் . சென்ற வாரம் நிக்சன் கேப்டன்சி பலருக்கும் பிடிக்காததால் தான் இந்த வாரம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அவரை நாமினேட்  செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version